Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய குறித்த வருடத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அவ்வருடத்துக்குள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, திரும்பிப்போவது அல்லது அரைகுறையாகச் செலவு செய்யும் நிலைமை ஏற்படாமல், அந்நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு திணைக்களத் தலைவர்களுக்கு உரியதாகும் என விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பாக அந்தந்தத் திணைக்களத் தலைவர்கள், ஒப்பந்தக்கார நிறுவனங்களைத் தெளிவுபடுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இவ்வருடத்துக்குள்; பூர்த்தி செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அம்பாறை, கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அப்பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகப் பயன்படுத்தி, மக்களை பயன் அடையச் செய்யும் பொறுப்பு, திணைக்களத் தலைவர்களுக்கு உரித்தானதாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் வழிகாட்;லுடனான நல்லாட்சியில், பல அபிவிருத்தித் திட்டங்கள் இப்பிரதேசத்தில்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமைச்சுகள் மற்றும் மாகாண சபையின் ஊடாக பெருமளவான நிதி, எமது பிரதேசத்துக்கு இவ்வருடம் ஒதுக்கப்பட்டு, அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றார்.
'நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், எதிர்காலத்தில்; கல்முனைப் பிரதேசத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள்; ஆரம்பிக்கப்படவுள்ளன. அந்த வகையில், கல்முனைப் புதிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும் அதிகாரிகள் மட்டத்திலும் சமூக அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளன. தற்போது இதற்காக காணிகளைச்; சுவீகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
இவ்வேலைத்திட்டத்தை சிறப்பாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கு அரசாங்க அதிகாரிகள் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மேலும், கல்முனை வர்த்தக மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், பிரதான வீதிக்குச் சமாந்தரமாக வீதி ஒன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அங்குள்ள வண்ட் வீதியை விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago