Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
இந்து மதம் ஒருவித தளர்ச்சி நிலைகண்டு மயக்கமுற்றிருந்த இக் காலகட்டத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் இந்து கலாசார அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டிருப்பது இக்காலத்துக்கு மிகப் பொருத்தமானது. இவரது பதவிக் காலத்தில் சைவமும் தமிழும் தமிழ்ப் பிரதேசமும் ஒருங்கே தழைத்தோங்கும் என ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.
இந்து மாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம், செயலாளர் பெ.தணிகாசலம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
தற்போதைய அரசாங்கத்தில் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவியேற்றமையானது அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும்.
அம்பாறை மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்தகால யுத்தத்தினால் மிக மோசமான உயிர் உடமை அழிவுகளை கண்ட மாவட்டமாக இருந்து வருகின்றது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்வு செய்யப்பட்டுள்ள போதிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத குறைபாடும் உள்ளது.
மேலும் இம் மாவட்டத்தில் திருப்படைக் கோவில்கள் உட்பட பல கிராமக் கோவில்களும் அமைந்துள்ளபோதிலும் சில ஆலயங்கள் இன்னும் முழுமையடையாத நிலையில் உள்ளன.
எனவே புனர்வாழ்வும் ஆலயவளர்ச்சியும் இரு கண்கள் போன்று தங்களால் பாதுகாக்கப்பட்டு நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படுவதுடன் தங்கள் பனி மேலும் சிறக்க இறைவன் அருள் கிடைக்கப் பிராத்திக்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
54 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago