Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாண சபையின் அமைச்சராகவிருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மூவின சமூகங்களுக்கும் பணியாற்றக் கிடைத்தமை ஆத்ம திருப்தியை அளிக்கின்றது.இன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ளவர் முஸ்லிம் காங்கிரஸைத் சேர்ந்த ஒரு உறுப்பினராக இருந்தாலும், அரசியல் வேறுபாடின்றி அவருடன் இணைந்து செயற்படவுள்ளேன் என கிழக்கு மாகாண சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(14) பாடசாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பாடசாலை அதிபர் ஏ.எல். அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் மேலும் கூறுகையில்,
உலகில் எத்துறையாக இருந்தாலும் சரி அத்துறையிலே முடியுமானவரை அர்ப்பணிப்புடன் செயற்படும் போதே இலக்கினை அடைய முடியும். அது அரசியலாகவோ, கல்வி அல்லது ஏனைய எத்துறையாகவோ இருக்கலாம்.
அரசியலை சிலர் பேசுவதில்லை, அரசியல் பற்றி சிந்திப்பதுமில்லை. இது ஒரு சாக்கடை என்றும் கூறுபவர்கள் எம்மில் அதிகம் பேர் உள்ளனர். இதற்கு கடந்தகால அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளும் காரணமாக இருக்கலாம்.
இன்று இலங்கையைப் பொறுத்தளவில் அரசியல் இல்லாமல் ஒன்றுமில்லை என்ற அளவுக்கு அனைத்து விடயங்களிலும் அரசியல் செல்வாக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.
எமது பழமையான கோட்பாடுகள், கதைகளை விடுத்து சிறந்த அரசியல் தலைமைகள் சமூகத்தில் உருவாக்கப்படல் வேண்டும். அரசியல் தலைமைகள் சமூகத்துக்கு வழிகாட்டுபவர்களாகவும் நேர்மை, நீதி, சமூக சிந்தனை, சிறந்த முகாமைத்துவம் போன்றவற்றைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.
இதில்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், வலயக்கலவிப் பணிப்பாளர் ஏ.எல்.காசீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாதனை மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததுடன் பேண்ட் வாத்திய கருவிகள் மற்றும் சீடைகளையும் வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago