2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் வரட்சியால் சுமார் 11 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தின் லகுகல, மஹாஓயா, தமண, பொத்துவில், அக்கரைப்பற்று, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 11 ஆயிரம் குடும்பங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் முதற்கட்டமாக 2.3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்படும் பட்டசத்தில் மேலதிக நிதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X