2025 மே 03, சனிக்கிழமை

அறுகம்பையில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம்.ஹனீபா

அறுகம்பை பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை, காணி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

பொத்துவில் அறுகம்பை சுற்றுலா பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடல் சுகாதார பிரதி அமைச்சர் பைஷால் காசீமின் தலைமையில் வியாழக்கிழமை (02) பொத்துவில் பசிபிக் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
'இப்பிரதேச பொதுமக்களுக்கு  உல்லாசப் பயணிகளின் வருகையினால் பல்வேறு கைத்தொழில்களில் ஈடுபட்டு தமது வருமானத்தை அதிகரிப்பதனூடாக நாட்டின் தேசிய வருமானத்தையும் அதிகரிக்க வாய்ப்பு கிட்டியிருக்கின்றது.
உல்லாசப் பயணிகளின் வருகையினால் இலங்கையின் தேசிய உற்பத்திக்கு பெரும் நன்மையளிக்கின்றது.

எனவே, இப்பிரதேசத்தை பசுமையான பிரதேசமாக மாற்றியமைத்து மேலும் சுற்றுலா பயணிகளைக் கவரக் கூடிய வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பிரதேசத்தில் வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே உல்லாசப் பிரயாணிகள்  வருகை தருகின்றனர், நாம் அதனை நாம் வருடம் முழுவதுமாக வரக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் இப்பிரதேசத்தில் நவீன முறையில் வீதிகள் அபிவிருததி செயயப்படவுள்ளதோடு, வடிகான்களையும் புனரமைப்பு செய்ய வேண்டும்.

இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பொத்துவில் மக்களது பிரதான தொழில்களான மீன்பிடி, விவசாயம் என்பன எவ்விதத்திலும் பாதிக்கப்படா வண்ணமே சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும்' என்றார்.

 இலங்கையின் சுற்றுலாத்துறை நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டு நாட்டின்  அந்ந்ப்யச் செலாவாணியை  அதிகரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X