Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Niroshini / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
“உள்ளூராட்சித் தேர்தலில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் எல்லை மீள்நிர்ணயக் குழுவினரின் அறிக்கையில், உரிய சட்டத்திருத்தங்களைச் செய்யாமல் ஒரு மாத காலத்தினுள் வர்த்தமானியில் பிரசுரிப்பது, சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் பாரியதோர் அநீதியாகும்” என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் இன்று தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“உள்ளூராட்சித் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறைமை மூலம், சம்மாந்துறை பிரதேசத்துக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சம்மாந்துறை பிரதேசத்தில் சுமார் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களர்கள் உள்ளனர். இப்பிரதேசத்துக்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தெஹியத்தகண்டி பிரதேசத்தில், சுமார் 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
"ஆனால், அந்தப் பிரதேசத்துக்கு 23 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை ஒப்பிட்டு பார்க்கின்ற போது, எல்லை மீள்நிர்ணயக் குழுவின் அறிக்கையில், பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசத்தில் கூடிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கும், சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசத்தில் குறைந்த உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கும் ஏற்ற வகையில் திட்டமிட்டு, உள்ளூராட்சித் தேர்தலின் புதிய முறைமை வரையப்பட்டுள்ளமை தெட்டத்தெளிவாக தெரிகின்றது” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
“56 இடங்களில் திருத்தங்கள் அவசியமென்று பரிந்துரை வழங்கியிருக்கின்ற நிலையில், எல்லை மீள்நிர்ணயக் குழுவினர் கையொப்பம் இட்டு கையளித்துள்ள அறிக்கையை ஆராய்ந்து, திருத்தங்கள் மேற்கொண்ட பின்னர்தான், வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும்.
அதில் சம்மாந்துறை பிரதேசம் தொடர்பான திருத்தங்களை மேற்கொண்டு உறுதிப்படுத்தியதற்குப் பின்னர்தான், வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago