Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
இந்துக் கோவில்கள்; வெறுமனே கோவில்க் கிரியைகள் மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதுடன் மாத்திரம் நின்றுவிடாது, சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஏ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை, விநாயகபுரம் கிராமத்தில் 'தெய்வீகக் கிராமங்களாக மாற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்து மதத்தின் கலை, கலாசாரம் பண்பாடு, நாகரிகம் உட்பட அனைத்து விடயங்களையும் ஆதிகாலத்தில் மன்னர்கள் கோவில்களின் ஊடாகவே வளர்த்துப் பாதுகாத்து வந்தனர். ஆனால், இன்று நாம் அவற்றையெல்லாம் கைவிட்டு வெறுமனே கிரியைகளை, வழிபாடுகளை மேற்கொள்கின்ற இடமாகவே கோவில்கள் செயற்பட்டு வருகின்றன. இது கவலைக்குரிய விடயமாகும்' என்றார்.
'சமூகப் பணியை முன்னெடுப்பதற்கு பணம் முக்கிய விடயமாக இருந்தபோதிலும், நிதி வளம் இருக்கின்ற கோவில்கள் கூட சமூகப் பணியில் ஈடுபடுவது மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது.
நாடு பூராகவும் 6,000 க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் இருக்கின்றபோதிலும், அவற்றில் ஒரு சில பிரதேசங்களிலுள்ள கோவில்களே சமூகப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
எனவே, எமது சமயத்தையும் கலை, கலாசாரத்தைப் பாதுகாத்து இந்து சமூதாயத்தை மேம்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் இந்துக் கோவில்கள் குறைந்தபட்சம் தங்களின் ; கிராமங்களில் ஒரு அறநெறி பாடசாலையாவது நடத்துவதற்கு முன்வர வேண்டும்'; எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
3 hours ago