2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இலத்திரனியல் கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை என்பவற்றின் இணை ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றாடலுக்கும் மனித உடலுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து, அகற்றும் பொருட்டு 'கழிவுகளற்ற இலங்கை' எனும் நிகழ்ச்சித் திட்ட வாரம் இம்மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டே இன்று கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

நடமாடும் வாகன ஒலிபெருக்கியில் பொது மக்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதுடன் இரு சபைகளினதும் சார்பில் 04 வாகனங்களுடன் 15 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X