2025 மே 19, திங்கட்கிழமை

இலவச ஆயுர்வேத வைத்திய சேவை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

வெளிநாட்டு வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில்  ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவைகள் இடம்பெறவுள்ளதாக அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் நிந்தவூரில் அமைந்துள்ள தொற்றா நோய்க்கான ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

இதற்கிணங்க, நாளை சனிக்கிழமை நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் மேற்படி சேவை ஆரம்பமாகவுள்ளது. இவ்வைத்திய சேவையில் கொரிய நாட்டு வைத்தியர்களுடன், உள்நாட்டு வைத்தியர்கள் இணைந்து சிசிச்சைகளை வழங்கவுள்ளனர்.

இதேபோன்று பொத்துவில், நிந்தவூர், மகாஓயா மற்றும் தெஹியத்தகண்டி உள்ளிட்ட பல பிரதேசங்களில், இந்த ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவைகள் இடம்பெறவுள்ளன.

கண், காது, மூக்கு, சத்திரசிகிச்சை, அக்குபஞ்சர், பஞ்சகர்ம மற்றும் பொது வைத்தியத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள், இந்த சேவையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X