Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 13 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
தன் மீது மிகவும் நம்பிக்கை வைத்து தன்னை இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்த தமது இளைஞர் சமூகத்தின் நம்பிக்கையை ஒருபோதும் தன்னால் வீணடிக்கப்படமாட்டாதென கல்முனைத்தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்சாத் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நேற்று வியாழக்கிழமை அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'என்னை கல்முனைத்தொகுதியின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இளைஞர்கள் எல்லோரும் சமூகத்தின் தேவை கருதி ஒன்றித்து பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அத்தனை இளைஞர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன்.
இத்தேர்தலில் என்னுடன் போட்டியிட்ட சக வேட்பாளர்களையும் எதிர்காலத்தில் அரவணைத்து செல்ல என்னால் முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதற்காக எமது ஒற்றுமைதான் நாம் கொண்டுள்ள மிகப்பெரும் பலமாகும்.
எதிர்காலத்தில் இளைஞர் சமூகத்தை மிகவும் சிறப்பாக திட்டமிட்டு வழிகாட்ட நாம் அனைவரும் வேறுபாடுகள் களைந்து செயல்பட இச்சந்தர்ப்பத்தில் நான் அனைத்து இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். அத்துடன் இளைஞர்களை எமது சமூகத்துக்கும் தேசிய வேலைத் திட்டத்துக்கும் நாம் தயார்படுத்துவோம்' என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago