Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பெண்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக்கொடுத்தமையை வரவேற்பதாகவும் இது இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு எனவும் ரோஹினா மஹரூஃப் தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காலம்சென்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக அவர்களை உலகின் முதல் பெண் பிதரமராக உருவாக்கியது மற்றும் திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக குமாரனதுங்க அவர்களை உலகின் நிறைவேற்று அதிகாரமுள்ள முதல் பெண் ஜனாதிபதியாக உறுவாகியது போன்ற வரலாறுகளை கொண்ட எமது நாட்டில் பல பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் உள்ளனர்.
இலங்கை அரசியல் நீரோட்டத்தில் பெண்களுக்கு பல சலுகைகளும் வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டிருந்த போதிலும் உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை பெண்களுக்கு வழங்கப்படாமை பெரும் குறையாகவே இருந்துவந்த அதேநேரம், இந்த உரிமையை எமக்கு பெற்றுக்கொடுக்க இதற்கு முன் எந்த அரசாங்கமும் முயற்சி செய்யவோ முன்வரவோ இல்லை.
ஆனால், பெண்களின் அரசியல் உரிமைகளில் ஒன்றான இந்த உரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அகியோரின் கூட்டு அரசாங்கத்தின் ஒருமித்த முடிவின் பேரில் பெண்களுக்கு 25மசதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் இலங்கை பெண்கள் மாத்திரமின்றி உலகப் பெண்மணிகளாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் விரும்பக்கூடியதுமான ஒரு விடயமாகும்.
நல்லாட்சியின் பங்காளர்கள் பெண்களுக்கான இந்த உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளமையையிட்டு இலங்கையில் வசிக்கும் என்னை போன்ற இலட்சக்கணக்கான பெண்கள் நல்லாட்சி அரசாங்கத்துக்கு கடமைப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் இந்த உரிமையை எமக்கு பெற்றுக்கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கவும் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
33 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago