2025 ஜூலை 03, வியாழக்கிழமை

'உறவை கட்டியெழுப்ப வேண்டும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொதுமக்கள் மற்றும் பொலிஸாருக்கிடையிலான உறவு பலம்பொருந்தியதாக கட்டியெழுப்பப்படுமாயின் சமூகத்தில் காணப்படும் பாரியளவிலான குற்றச் செயல்களை இல்லாதொழிக்க முடியும் என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பொது மக்களும் பொலிஸாரும் இணைந்து நாட்டில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டதன்  நோக்கங்களின் பிரதானமானதாகக் காணப்படுவது பொலிஸார் பொது மக்கள் நல்லுறவைக் கட்டியெழுப்புவதேயாகும்.

ஆனால், அந்த சிவில் பாதுகாப்புக் குழுக்கள் முறையாக இயங்காது அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அதிகாரம் நன்மதிப்பை வைத்துக் கொண்டு அவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல துயரச் சம்பவங்களும் நடந்துள்ளன.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு பலவீனமாக இருப்பதையே சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்;கள் விரும்புகின்றனர்.

சிவில் பாதுகாப்புக் குழுக்கள் முறையாக இயங்குமாயின் ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள குற்றச் செயல்களை தடுத்துக் கொள்ள முடிவதுடன், குற்றவாளிகளையும் மிக இலகுவாக கைது செய்ய முடியும் என்றார்.

மேலும்,ஒவ்வொருவரும் தனது வேலையினையும் தனக்கான பணம் சம்பாதிப்பதிலுமே மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தும் என்பதனை எவரும் நினைத்துபார்ப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .