2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'உளவளத்துறையும் தொழில் வழிகாட்டலும்' பயிற்சிப் பட்டறை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 


-எஸ்.எல். அப்துல் அஸீஸ்

உளவளத்துறையும் தொழில் வழிகாட்டலும் என்னும் தலைப்பில், கல்முனை 'திவிநெகும' பிரதேச செயலகப் பிரிவினரால் பயிற்சிப் பட்டறையொன்று, செவ்வாய்கிழமை (09) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

'திவிநெகும' சமூக அபிவிருத்தி திணைக்கள  உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட இந்த செயலமர்வில், கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட  பகுதிகளில் கடமையாற்றும் சுமார் 50 உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வானது, 'திவிநெகும' தலைமைப்பீட  முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச்.முகமட் ஹனி, திவிநெகும முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீறா,'திவிநெகும' வங்கியின் வலய  முகாமையாளர் எஸ்.எஸ்.சதீஸ் , உட்பட பலரும் 'திவிநெகும' சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத், உளவள துணையாளர்களான எம்.எச்.ரினோஸ் ஹனிபா, ஏ.ஆர்.தஹ்லான் ஆகியோர்கள்  கலந்து கொண்டனர்.

இப்  பட்டறையில்  உளவளத்துறையின் அவசியம், உளவியல் பிரச்சினைகளை இனங்காணல்,  குடும்ப உளவளங்கள், குடும்ப பிரச்சினைகள் அபிவிருத்திக்குத் தாக்கஞ் செலுத்தும் விதம் போன்ற தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X