Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 29 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
'எவ்வேளையிலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம். ஆதலால், அதற்குத் தயாராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்' என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத்தொகுதி பிரசாரச் செயலாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.
அம்பாறை, சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் ஐ.தே.க.வின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பான கலந்துரையாடல், சாய்ந்தமருதிலுள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் மாற்றுக் கட்சிகளின் தலைவர்கள் நல்லாட்சியை குழிதோண்டிப் புதைப்பதற்கு எத்தனித்து வருகின்றனர். சர்வதிகாரமிக்க குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து மிகச் சிறப்பான ஆட்சியை நாடு கண்டுள்ள இச்சூழ்நிலையில் அதனைப்; பொறுக்கமுடியாத சில அரசியல்வாதிகள், இந்த நல்லாட்சி மக்களுக்கு எதையும் செய்யாதெனக் கூறி திசைதிருப்பப் பார்க்கின்றனர். இதற்கு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்' என்றார்.
'நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் தமிழ் பேசும் மக்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. பெரும்பான்மையின மக்களும் இந்த நல்லாட்சியை வரவேற்கின்றனர். இந்த நல்லாட்சி சிறப்பாக நடைபெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் நாட்டு மக்களும் அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும்.' என்றார்.
'எமது பகுதியில் ஐ.தே.க.வுக்கு இருந்து வருகின்ற ஆதரவை தக்கவைக்க வேண்டும். மேலும், அங்கத்தவர்களை இணைத்து கட்சியை மேன்மேலும் பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டு, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு எம்மை தயார்படுத்த வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago