Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
இந்த நாட்டில் தமிழர்களுக்கு என்று பூர்வீக வரலாறும் மொழியும் கலை, கலாசாரப் பண்பாடுகளும் இருந்து வந்துள்ளன. இதனை இங்கு ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டு அழித்து வந்துள்ளனர். இதனை நாம் தொடர்ந்து அனுமதிக்காது ஒற்றுமைபட்டு பாதுகாக்கும் பணிகளில் மிக தீவிரமாக செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை, விநாயகபுரம் கிராமத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தெய்வீக கிராம நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்து மதம் எவ்வளவு தொண்மையானதோ அதேபோன்று தமிழ் மொழியும் தொன்மையானது. இன்று ரஷ்யாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்களில் நான்காது மொழியாக தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது.
இதனை அவர்களின் நாட்டில் உயர்ந்த இடத்தில் எமது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் செம்மை மொழியான தமிழ் மொழியின் மகத்துவத்தினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
ஆனால், இந்த நாட்டில் எமது மொழி, கலை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்கள் அழிந்து கொண்டு செல்லுகின்றன. கடந்த காலங்களில் இதனை நாம் பாதுகாக்க முடியாது போனாலும், இன்று இதற்கான நல்ல சூழல் இருக்கின்றது. இதனை நாம் சந்தர்ப்பமாக கொண்டு நாம் ஒற்றுமைப்பட்டு வளர்க்க வேண்டும்.
இந்நிலைமைகள் தொடருமானால் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். தொடர்ந்து மற்றவர்களின் தயவில் தங்கியிருக்காது கிராமத்து இளைஞர்கள் ஒன்று திரண்டு எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை வளர்த்;து கொடுக்க வேண்டும். தமிழையும் சைவசித்தாந்த கொள்கைகளையும் கடைப்பிடித்து தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.
இதன்போது விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியதைத் தொர்ந்து கோமாதா விழிபாடு வில்லம்மரம் நடுகை, நந்திக்கொடியேற்றல் அறநெறி கீதம் இசைத்தல் போன்ற ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கல், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கல், உகந்தை முருகன் யாத்திரிகள் மடத்தினை நிர்மாணிப்பதற்கானக முதல் கட்டமாக 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்கியதுடன் 23 ஆலயங்களுக்கு தலா ஒரு இலட்சம் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டள்ளதுடன் விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கான மணித் துணுக்கான அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டுள்ளது.

5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago