Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பொத்துவில் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள நெற்செய்கை காணிகளில் இம்முறை 20,996 ஏக்கர் நிலத்தில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய நீர்ப்பாசனப் பொறியலாளர் டபிள்யூ.யூ.ஏ. ஸ்ரீவர்த்தன தெரிவித்தார்.
2015/2016ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் இன்று திங்கட்கிழமை பொத்துவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸ்ரத் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் இன்னும் இரு வாரங்களில் முடிக்கப்படவுள்ளன.
நாவுல்ல குளப்பகுதியில் 30 வருட காலத்துக்கு மேலாக பராமரித்து வரப்பட்ட குள வாய்க்கால்களுக்கு தற்போது வன ஜீவராசி திணைக்களத்தினால் எல்லை இடப்பட்டிருப்பதானது காலப்போக்கில் அப்பகுதி வன விலங்குக்குரிய பகுதியாக மாற வாய்ப்பு ஏற்படலாம்.
எனவே, இதனை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் செம்மணிக்குளப் பகுதியின் வான் பகுதியில் வேளாண்மை செய்வதை தவிர்த்து கொள்ளும்படியும் இதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு குறித்த விவசாயிகளே பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, விதைப்புக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் டீ.ஏ.ஜெயகுமார், கமநல சேவை அதிகாரி ஏ.அப்துல் றஹீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
51 minute ago
59 minute ago