Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழங்களில் கற்றும் மாணவர்கள் வரை இன்று தமது தாய் மொழியில் தேர்ச்சியற்றவர்களாக காணப்படுகின்றனர்.இதற்கு காரணம் அவர்களில் வாசிப்பு திறன் குறைந்து செல்வதாகும்.இதனை சீர்செய்து தமிழ் மாணவர்கள் தமது தாய் மொழியை கற்பதுடன் ஏனைய மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராசா தெரிவித்தார்.
சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.இரவீந்திரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மாணவர்கள் தமிழ் மொழியை சிறப்பாக கற்றுக் கொள்வதுடன் சர்வதேச மொழியான ஆங்கில மொழியையும் ஆர்வத்துடன் கற்கவேண்டும்.காரணம் சிறந்த பல நூல்கள் அதிகமானவை ஆங்கில மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது.
இந்நூல்களில் உள்ள அறிவுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நாம் வெறுமனே தாய் மொழியுடன் நின்றுவிடாது ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் .
ஒரு மனிதன் சிறந்த அறிவாற்றல் உள்ளவனாக மாறவேண்டுமென்றால் அவனிடம் மொழியாற்றல் சிறப்பாக இருக்க வேண்டும்.
இன்று இலங்கையைப் பொறுத்தமட்டில் சிங்கள மொழியின் தேவையும் காணப்படுகின்றது.எனவே, மாணவர்கள் பல்மொழியில் ஆதிக்கம் கொண்டவர்களாக மாறவேண்டும். அப்போது பல சவால்களை இலகுவாக வெற்றிக் கொள்வதற்கு பல்மொழி தேர்ச்சி உறுதுணையாக அமையும்.
இதற்கு பாடசாலைக் காலம் ஒரு முக்கியத்துவம் கொண்ட காலமாக காணப்படுகின்றது.இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தாய் மொழியின் தேர்ச்சியுடன் பல்மொழிகள் கற்ற சமூகமாக திகழவேண்டும் என்றார்.
44 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago