Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுக்கும் நடவடிக்கையின் பொருட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அங்கு சென்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையிலான குழுவினரை, அப்பிரதேச மக்கள் திரும்பிச் செல்லவிடாது வழிமறித்துத் தடுத்ததில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பிரதேச மக்களும் மீனவர்களும் கடற்கரைக்குச் செல்லும் வழியை மறித்து கட்டைகள், கற்கள் ஆகியவற்றை இக்குழுவினர் திரும்பிச் செல்லவிடாது வழிமறித்துள்ளனர்.
கடலரிப்புக் காரணமாக ஒலுவில் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுடன், இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இக்கடலரிப்பை அரசியல்வாதிகள் பலர் பல தடவைகள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனரே தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் அவர்கள் இதுவரையில் எடுக்கவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
தமது பிரதேசம் தொடர்ந்து கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருவதைத் தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும்வரை அவர்களை அவ்விடத்திலிருந்து செல்வதற்கு விடமாட்டோம் எனவும் அவர்கள் கூறினர்.
இக்கடலரிப்பை அரசியல்வாதிகள் பலர் பல தடவைகள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனரே தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் அவர்கள் இதுவரையில் எடுக்கவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago