2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை உடனடியாக தரமுயர்த்தி சகல அரச சேவைகளும் அப்பகுதி மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்ரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை(21) நிகழ்த்திய கன்னியுரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்லின மக்கள் வாழும்  ஒரு நாட்டில்  அதிகாரப்பகிர்வு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அது இல்லாதவிடத்து அங்கு முரண்பாடுகள் வித்திடுவது இயல்பே.

இனங்களுக்கு இடையில் இனத்துவ அடையாளங்கள் பேணப்படுவதில் ஏற்படும் குறைபாடுகள் இனப்பிரச்சினைக்கு மூலகாரணமாக அமைந்துவிடுகின்றது.

சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு, அது சட்டமாக்கப்படுமாயின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை இலகுவில் எட்ட முடியும் என்றார்.

மேலும்,கடந்த முப்பது  வருடகால யுத்தத்தை பயன்படுத்தி  அம்பாறை மாவட்ட மக்கள் தற்போது திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை  நகர அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் கல்முனை நகரை அண்டிவாழும் மக்களின் குடியிருப்புக் காணிகளும் தமிழர்களின் எஞ்சியுள்ள விவசாய நிலங்களும் வடிகான்களும் நீர்நிலைகளும் சூறையாடப்பட்டு இயற்கையின் சமனிலையை மாற்றி ஒரு சிலரை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்படும் செயற்திட்டத்தினை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

சரியானதொரு அரச நிர்வாகம் இன்றி அநாதையாக நிற்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகப்பிரிவினை தரமுயர்த்தி வழங்குமாறு மீண்டும் இச்சபையினூடாக பிரதமரைக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் நகர அபிவிருத்தித் திட்டத்தில் அப்பிரதேசத்தல் வாழும் மூவின மக்கள் சார்பான பொதுவான ஒரு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு  அத்திட்டத்தினை வெற்றிகரமாக அமுல்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .