Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
ஒரு பாடசாலை அபிவிருத்திக் குழுவானது அந்தப் பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு உதவியாக செயற்பட வேண்டுமே தவிர மாறாக பாடசாலை நிருவாகத்துக்கு கட்டளையிடுகின்ற சபையாக மாறமுடியாது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அக்ஃஅந்-நூர் மகா வித்தியாலயத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.எல்.கிதுறு முஹம்மட் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்தப் பாடசாலையானது பல வருடகாலமாக புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடுதலான மாணவர்களை சித்தியடையச்செய்து வரலாற்றுச் சாதனையினை நிலைநாட்டிவருகின்றது அதனாலேயே இப்பாடசாலையானது தேசிய ரீதியாக பேசப்படுமளவுக்கு இன்று நிலமை மாறியிருக்கின்றது. இதற்கு காரணம் இப்பாடசாலையிலுள்ள அதிபர், ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களுமே இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தனது பிள்ளையின் கல்வி விடயத்தில் அதீத அக்கரையுடன் செயற்படுவதனை காணமுடிகின்றது. நாம் எல்லோரும் மேற்கொண்ட முயற்சியினுடைய அறுவடைகளைத்தான் நாம் இன்று மகுடம் சூடிக்கொண்டிருக்கின்றோம்.
இங்கு அதிபராக ஒருவர் இருக்கலாம் நாளை வேறு யாராவது வரலாம் ஆனால் இங்குள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிபருடன் பாடசாலை அபிவிருத்தியில் ஒன்றித்து பயணிக்க வேண்டும். ஒரு பாடசாலையில் அதிபரை கொண்டுவருவதற்கும் பாடசாலையில் நல்ல பல விடயங்களைச் செய்வதற்கும் முதலில் பாடசாலை அபிவிருத்திக் குழுவினரிடையே ஒத்த கருத்து ஏற்பட வேண்டும் இல்லை எனில் அக்குழுவானது தேவையற்ற குழுவாகவும் பிரச்சினைகளை வளர்க்கக் கூடிய ஒரு குழுவாகவுமே காணப்படும்.
இன்று பாடசாலைகளில் இவ்வாறான அபிவிருத்திக் குழுக்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட்டு கல்வி அபிவிருத்திக்கு உதவுகின்ற சபையாகவே மாத்திரம் இருக்கவேண்டும்.
இப்பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களிடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால் இப்பாடசாலையில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது சிலர் கல்வி அபிவிருத்தி என்பதனை விடவும் தங்களுடைய கருத்துக்கள் பாடசாலைக்குள் பிரதிபலிக்க வேண்டும் என எண்ணியிருந்த போது பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் குழுவுக்குமிடையிலான உறவு விரிசலடைந்து இறுதியில் பாடசாலை அபிவிருத்திக் குழுவை கலைக்கவேண்டியேற்பட்டது .
பாடசாலை அபிவிருத்திக் குழு என்பது அதிபர் ஆசிரியர்களுக்கு ஒத்தாசையாக நின்று பாடசாலை அபிவிருத்தியில் முன்னின்று உழைக்கக்கூடியவர்களாக காணப்படவேண்டும் அது யாராக இருப்பினும் சரியே எங்களுக்கு அவை முக்கியமல்ல கல்விச் செயற்பாடுகள் சிறப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும் என்றார்.
32 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago