2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'15க்கு முன்னர் விதைப்பு பணிகளை நிறைவு செய்யவும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

2015/2016 பெரும்போகத்தில் அக்கரைப்பற்று பிராந்திய நீர்பாசனப் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, தீகவாபி, இலுக்குச்சேனை, வீரையடி ஆகிய நீர்பாசனப் பிரிவுகளில் நெற் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் விதைப்பு பணிகளை நிறைவு செய்யுமாறு அக்கரைப்பற்று பிராந்திய நீர்பாசப் பொறியலாளர் ரீ. மயூரன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிராந்திய நீர்பாசனப் பொறியியலாளர் பிரிவில் இம்முறை பெரும்போகத்தின் போது சுமார் 30 ஆயிரம் ஏக்கர் காணியில் நெற்செய்கை பண்ணுவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க,எதிர்வரும் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை பெரும்போக விவசாயிகளுக்கு அம்பாறை டி.எஸ். சேனநாயக்கா சமுத்திரத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படவுள்ளது என்றார்.

மேலும்,அக்கரைப்பற்று நீர்பாசனப் பொறியியலாளர் பிரிவிலுள்ள நெற்காணிகளில் பெரும்போக விதைப்பு பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

அத்துடன், அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவில் சுமார் 2400 ஏக்கர் காணியில் கரும்புச் செய்கையை மேற்கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .