Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்,வி.சுகிர்தகுமார்
மூடப்பட்ட நிலையில் காணப்படும் அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச கைத்தொழில் அபிவிருத்தி நிலையம் மீள செயற்படுத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிராந்திய செயற்பாட்டுக் குழுச் செயலாளர் டி.ஜெயாகரின் கோரிக்கைக்கு அமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) ஆலையடிவேம்பு பிரதேச கைத்தொழில் அபிவிருத்தி நிலையத்தை பார்வையிட்டப் பின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த நிலையமானது எதிர்வரும் ஆறு மாதக் காலப் பகுதிக்குள் விரைவாக புனரமைப்பு செய்யப்பட்டு திறக்கப்படும்.
இந்நிலையம் ஆரம்பத்தில் நெசவு பயிற்சி கைத்தொழில் நிலையமாக இயங்கி வந்தது.
இந் நிலையம் மீண்டும் இயக்கப்படும் போது, இப் பகுதி வாழ் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் நேரடி தொழில் வாய்ப்பினைப் பெறும் வகையில் வழியமைத்துக் கொடுக்கப்படும் என்றார்.
28 minute ago
28 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
28 minute ago
41 minute ago
52 minute ago