2025 மே 22, வியாழக்கிழமை

'கௌரவமாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளோம்'

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர், எஸ்.ஜமால்டீன்

முஸ்லிம்கள் சந்தோசமாகவும் தைரியமாகவும் கௌரவமாகவும் வாழக் கூடிய பாதுகாப்பான ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தித் தந்துள்ளோம் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டி கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின்  (எஸ்டோ) தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா, நேற்று (14) மாலை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைப்பின் தலைவர் என்.ரி.நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி அமைச்சர்  தொடர்ந்து  உரையாற்றுகையில்,

இன்று எமது முஸ்லிம் மக்கள் பள்ளிவசல்களுக்குப் பாதுகாப்பாக சென்று வருவதற்கும் பெண்கள் தங்களது   பர்தாக்களைப் பாதுகாத்து கௌரவமாக வாழக் கூடிய சூழலை இந்த நல்லாட்சியில் நாம் ஏற்படுத்தித் தந்துள்ளோம்.

இந்த நல்லாட்சியின் பங்காளரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதற்காக பல தியாகங்களைச் செய்துள்ளது. எதிர்காலத்திலும் முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாவலனாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் நாங்கள் இருப்போம்.

இன்று அக்கரைப்பற்றில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இப்பிரதேசத்திலுள்ள மகளிர் வருமானம் ஈட்டக் கூடிய தொழிலில் ஈடுபடக் கூடியதாக இந்த தையல் பயிற்சி நிலையத்தை மேலும் விஸ்தரிப்பதற்கான உதவிகளை எதிர்காலத்தில் செய்வேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X