2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காரைதீவில் கலை பண்பாட்டுத் திருவிழா

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.ரஹ்மத்துல்லா

சமூக நல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழா எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை தொடர்ந்து 03 நாட்களுக்கு அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய ஒற்றுமைப்பாட்டுக்கும்; நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், ஐரோப்பிய ஒன்றியம், கெயார் நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் 'கலை பண்பாட்டின் ஊடாக நல்லிணக்கத்தை பேசுதல்;' எனும் தொனிப்பொருளில் இவ்விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவின் முதலாம் நாள் விழா காரைதீவு கனகரத்தினம் மைதானத்திலும் இரண்டாம் நாள் விழா விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் மூன்றாம் நாள் விழா சண்முகா வித்தியாலயத்திலும் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  

கிழக்கு மாகாண பல்லினச் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பாரம்பரிய அடையாள ஆற்றுகை, அதிகம் பேசப்படாத மற்றும்  கவனத்திற்கொள்ளப்படாத கிழக்கு மாகாணத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்தின் ஆற்றுகை, கலை, கலைஞர்களைக் கொண்டுவருதல் ஆகியன முதலாம் நாள் விழாவில் நிகழ்வுகளாக உள்ளன.

வாழ்வியலுக்கான கலைச் செயற்பாட்டாளர்களின் செயல்வாதங்கள் இராண்டாம் நாள் விழாவின் நிகழ்வாகும்.
இனம், வர்க்கம், பிரதேசம், சமயம், பால்நிலை, சாதி, குடி, ஏற்றத்தாழ்வு தொடர்பில் கவனம் செலுத்தி சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான ஆற்றுகை, கற்றல் மற்றும் ஆய்வுச் செயற்பாட்டுக்கு உட்படுத்தவேண்டிய பொருத்தமான கலை ஆற்றுகைச் செயற்பாடு ஆகியன மூன்றாள் நாள் நிகழ்வுகளாக உள்ளன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X