2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

1400 கிலோமீற்றர் கரையோரப் பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கையில் 1400 கிலோமீற்றர் கரையோரப் பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனையுடன் நாடு முழுவதும் முன்னெடுக்கபட்டு வருவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாட்டு முகாமையாளர் எ.ஜெ.எம்.குணசேகர தெரிவித்தார்.

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஒருங்கிணைந்து அம்பாறை மாவட்ட செயலகத்தினூடாக, அம்பாறை மாவட்டத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்தப்படுத்துவதற்கான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இன்று நாடு சுமூகமான நிலைக்கு திரும்பியுள்ளதால் சுற்றுலாத்துறை துரிதமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியும் வருமானமும் அதிகரித்துள்ளது.

கடல், குளம், வாவிகள், களப்புகள் என்பன எமது நாட்டுக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள பெறுமதிமிக்கதொரு வளமாகும். இதன் இயற்கை அழகும், ரம்மியமான இயற்கை சூழலையும் கண்டு மகிழவே உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் படையெடுக்கின்றனர்.

இதனை மக்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும். சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கும்போதே சுகாதாரமிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் ஏற்படும் விளைவுகளை எம்மில் அதிகமானவர்கள் இருந்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள், போத்தல்கள், டின்கள் போன்றவற்றிலான பாவனைகள் இன்று மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இதனை ஏனைய நாடுகளிலுள்ள மக்கள் முறையாக பயன் படுத்தி அதன் கழிவகற்றலையும் உரிய முறைப்படி மேற்கொள்கின்றனர். ஆனால் எமது நாட்டு மக்கள் இதனை முறையாக செயற்படுத்தாமல் சுயநலப் போக்குடன் இருந்து வருவது கவலைக்குரிய விடயமாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X