2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'கிழக்கு மக்களை ஏமாற்ற இடமளியோம்'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கில் இடம்பெற்ற யுத்த அனர்த்தங்களின் போது பதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான நடவடிக்கைகள், கருத்துக்கூறல்கள் பற்றிய நம்பகத்தன்மை பெரிதும் குறைந்து செல்கின்றது. ஏனெனில் பிரதிநிதிகள் கொண்ட குழுக்களை அமைக்கும்போது அதில் இன ரீதியிலான சமத்துவம் பேணப்படுவதில்லை என அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் அன்வர் நௌஷாத் நேற்று (12) இடம்பெற்ற  தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ரீ.எப்.சி மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கில் இன முரண்பாடுகள் தொடர்பிலாக பிரச்சனைகள் இடம்பெற்ற போதெல்லாம் நாம் முன்னின்று அவற்றை தீர்ப்பதில் பங்குகொண்டோம். இன்று யுத்த அனர்த்தம் தொடர்பிலாக சில உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டச் செயல்பாடுகள் மூலமாக இனவாதத்தை வளர்ப்பது குறித்து நாம் பெரிதும் அச்சமடைகின்றோம்.

நமக்கிடையே மீண்டும் ஒரு இன முரண்பாட்டை வளர்ப்பதற்கான அடிப்படையினையே இச்செயற்பாடுகள் கொண்டுள்ளன. இந்நடவடிக்கையானது திரை மறைவிலான செயல்பாடாகவும் இது குறித்த ஆட்சேபனைகள் பல நிறுவனங்கள் மூலமாக எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இது குறித்து நாம் மாவட்ட செயலாளருக்கும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு வரவுள்ளோம்” என்றார்.

யுத்த பாதிப்பானது கிழக்கில் மூன்று இன மக்களையும் பாதித்துள்ளது. விசேடமாக ஆட்கள் காணமல் போதல், உயிரிழப்பு, மீள் குடியேற்றம், சொத்து இழப்புக்கள், வயல் காணிகள் அபகரிப்பு, எல்லைகள் மீள் நிர்ணயம், வன இலாகா செயற்பாடுகள், அரச காணிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு நீதியான தீர்வொன்றினை பெற்றுக்கொள்ளும் வகையிலாக ஆரம்பம் முதல் இறுதி வரை நம்பகத்தன்மையுடன் பக்கச்சார்பில்லாத கருத்துக்கள் முன் மொழியப்பாடல் வேண்டும். அதை விடுத்து தனி நபர் இராஜாங்களுக்கு இடமளிக்க முடியாதெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X