Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,எம்.சி.அன்சர்
'எமது சமூகத்துக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் பின்னிற்கப்; போவதில்லை' இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, ஒலுவில் ஜும்மாப் பள்ளிவாசலில் சனிக்கிழமை (12) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மக்களுக்கு பயன்பெறும் நோக்கில் எங்களின் நடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நாங்கள் கையாளவேண்டும். கட்சிகளை நம்பி வாக்களித்த மக்கள் எதனை விரும்புகின்றார்களோ, அது அவர்களுக்கு கிடைக்கவில்லையென்றால், அந்தக் கட்சிகளினால் எந்தவித பிரயோசனத்தையும் மக்கள் அடையப்போவதில்லை' என்றார்.
'அரசியல் பலம் என்பது மக்களின் அன்றாட தேவைகளுக்கு பின்னணியிலிருந்து செயற்படும் பெரும் பலமாகும். அதனை நாம் சரியாகப் பயன்படுத்த தவறுவோமாயின், அரசியல்வாதிகளை விடவும் மக்களே பாதிக்கப்படுவர். இந்த நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக எமது கட்சி சமூகத்துக்கு எதிராக செயற்படும் சக்திகளை கவனமாக கையாளுகின்றது' எனவும் அவர் தெரிவித்தார்.
'ஒலுவில் கிராமம் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ளதுடன், கடலரிப்பினாலும் பாதிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில்; இக்கிராமத்தை அபிவிருத்தி செய்து கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பேன்' எனவும் அவர் கூறினார்.
தமது கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும் இதன்போது அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago