Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
தமிழர்களின் தலைமை இரா.சம்பந்தனின் உறுதிமொழியை நேரில் எதிர்பார்ப்பதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகளின் சங்கம் தெரிவித்தது.
அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் தொடர்ந்து 12ஆவது நாளாகவும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாகாண சபைக்கு முன்பாக முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே அவர்கள்இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
தங்களது உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் உட்பட பல்வேறு தலைவர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் தங்களை சந்தித்தபோதும் உறுதியான பதிலை எவரும் வழங்கவில்லை.
இறுதியாக தமிழர்களின் தலைமைத்துவம் எனும் ரீதியில் சம்மந்தனின் உறுதி மொழிக்காக காத்திருக்கின்றோம் என்றனர்.
மேலும்,நேற்று சனிக்கிழமை(10) 2015ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை நிறைவு செய்த சிங்கள மொழிமூல பட்டதாரிகளுக்கு மாகாண சபையில் தொழில் வாய்ப்புக்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்றது. இவர்களுக்கு மாத்திரம் எவ்வாறு திறைசேரி அனுமதியளித்தது.
இன விகிதாசார சமப்படுத்தல் முறை நீக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டபோதும், இன விகிதாசார முறையே பின்பற்றப்படுகின்றமை நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நேர்முகப்பரீட்சையின் மூலமும் அண்மைக் கால செயற்பாடுகளின்போதும் தெரியவருகிறது.
எனவே,சம்பந்தன் இப்பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதோடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெளிவு படுத்தி நியாயமான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
8 minute ago
11 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
40 minute ago