2025 மே 03, சனிக்கிழமை

'சுகாதார சீர்கேடுகளை அறிவிக்கவும்'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மற்றும் உணவகங்கள், பேக்கரிகள் போன்றவற்றில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டால் பொது மக்கள் உடனடியாக சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எல். அலாவுதீன், இன்று ஞாயிற்றுக்கிழமை (12) தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புத் தொடர்பாகவும் அதிக கவனம் செலத்தப்பட்டு வருகின்றது.

அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சிற்றூண்டிச் சாலைகள் உட்பட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள், குளிர்பானம் விற்பனை செய்யும் இடங்கள் தொடர்பில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் அசுத்தமாக காணப்பட்டால் பொது மக்கள் எழுத்து மூலம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு, அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் போது, அனாமோதயமாகத் தெரிவிக்காமல் முறைப்பாடு தெரிவிப்பவரின் பெயர், விலாசம் போன்றவற்றுடன், முறைப்பாடு தெரிவிக்கும் இடமும் குறிப்பிடப்பட வேண்டுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X