Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பதிவு செய்யப்பட்ட சிறுவர்; காப்பக இல்லங்களை அம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர்களை நீதிமன்றங்களின் உத்தரவுக்கமைய சிறுவர்; காப்பக இல்லத்தில் பராமரிக்க வேண்டியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்படும் சிறுவர்களை களுத்துறை மற்றும் கம்பஹாவிலுள்ள காப்பக இல்லங்களில் பராமரிப்பதினால், அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிரேஷ்ட மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.ஏ.வஸீர்தீனிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கேட்டபோது, 'பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்பதற்காக பதிவு செய்யப்பட்ட சிறுவர் காப்பக இல்லங்கள் அம்பாறை மாவட்டத்தில் இல்லாமையினால் சிரமம் காணப்படுகின்றது.
சிறுவர் காப்பக இல்லங்களை பதிவு செய்து நடத்துவதற்கு ஆர்வமுள்ள சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் அக்கரைப்பற்றிலுள்ள மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களத்துடன் தொடர்புகொள்ளும் பட்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிறுவர் காப்பக இல்லங்களை ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கமுடியும்' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
44 minute ago
49 minute ago
2 hours ago