Suganthini Ratnam / 2017 மே 01 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தகவலறியும் சட்டமூலம் இலங்கையில் கொண்டுவரப்பட்டமை ஊடகத்துறைக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருத வேண்டும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் தகவல்களை வழங்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தேர்வும் அட்டாளைச்சேனை ஒஸ்றா கூட்ட மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'தற்போதைய நவீன உலகில் ஊடகத்துறையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாககக் காணப்படுகின்றது.
சிறந்த அர்ப்பணிப்புடன் பக்கச்சார்பின்றி சிறந்த தொடர்பாடலை வைத்துக்கொண்டு, நம்பகத்தன்மையுடைய செய்திகளை வழங்குவதன் மூலம் சிறந்த அடைவுகளை ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago