2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுவோம்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

 'முன்னைய ஆட்சியாளர்களினால் பாதுகாப்பு மற்றும் தொல்பொருளைக் காரணங்காட்டி எமது வாழ்விடங்கள் மற்றும் விவசாயக் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்த ஆட்சியாளர்களாலும் இடம்பெறாத வகையில் நாம் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற ரீதியில் செயல்படுவோம்' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின்  பரிசளிப்பு  விழாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் ஊரணி மற்றும் பாணமை போன்ற இடங்களில் வாழ்கின்ற தமிழர்களின் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. ஆனால், ஏனைய சமூகத்தவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்கள் தங்களது காணிகளை அளவீடு செய்து தெரிவிக்குமாறு காணிச் சீர்திருத்த ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக எனக்கு அறியக் கிடைத்துள்ளது. இது   அப்பிரதேச தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அரசினால் கபடத்தனமாக தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு பூர்வீக இடங்களை இன்று இழந்து நிற்கின்றனர். இவ்வாறு இந்த ஆட்சியாளர்களும் செயற்பட கூடாது. அவ்வாறு மேற்கொள்ளப்படும்போது நாம் அதற்கு எதிராக போராடவும் தயங்கமாட்டோம்.

இந்த அரசை தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து அமைத்துள்ளனர். இதற்கு விசுவாசமாக அரசும் செயற்படும் என தமிழ் மக்கள் நம்புகிறோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X