Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 11 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
தமிழ் மக்களுக்கான தீர்வை நல்லாட்சி அரசாங்கம் இன்னும் வழங்காமல் இருப்பது கவலையான விடயம் எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியிலிருந்த அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் கரிசனை காட்டவில்லை எனவும் அவர் கூறினார்.
தரம் -1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, சம்மாந்துறைக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வேப்பையடிக் கலைமகள் வித்தியாலயத்தில் இன்று (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'கடந்த காலத்தில் மாறி, மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள், தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளார்களே தவிர, தமிழர்களுக்கான தீர்வை வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.
தமிழ் மக்கள் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக வட,கிழக்கு இணைந்த புதிய அரசியல் தீர்வை எதிர்பார்த்தவர்களாக உள்ளனர். இந்தத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவதானமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது' என்றார்.
'மேலும், அம்பாறையில் தமிழ்ப் பிரதேசங்கள் பல வழிகளாலும் பாதிக்கப்படுகின்றன. அதாவது, அத்துமீறிய குடியேற்றம், தொழில் வழங்கும் விடயங்கள், வளப்பகிர்வு போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்பட்ட வண்ணமாக நாம் உள்ளோம்' என்றார்.
9 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025