Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
இலங்கையின் உயர் கல்வியின் வளர்ச்சிக்கும் அதனுடான அபிவிருத்திக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வியாபார முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு கற்கை நெறி அங்குராப்பண வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையின் உயர்கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை வழங்கி வரும் இப்பல்கலைக்கழகம் சர்வதேச மட்டத்தில் ஒரு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக மாறி வருகின்றது.
இப்பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு சீனா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.
இங்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கற்கை நெறிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் செவ்வனே கல்வியினைத் தொடர்ந்து நாட்டின் அபிவிருத்திக்கும் சமூகத்துக்கும் பிரயோசனம் உள்ளதாக செயற்பட வேண்டும்.அப்போது தான் உங்களது இலக்கை அடைவதோடு பல்கலைகழகத்தின் வளர்ச்சிக்கும் உந்து சக்கிதியாக அமையும்.
எனவே உங்களது உயர் கல்வி மூலம் நாடும் சமூகமும் பல்கலைக்கழகமும் முன்னேற வேண்டும்.
ஒரு உயர் கல்வி நிறுவனம் முன்னேற வேண்டுமானால் கல்வியில் மட்டும் நின்றுவிட முடியாது. அங்குள்ள மாணவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்மை அடையக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் கல்வியில் மட்டும் நின்றுவிடாது தனது புறவிருத்தி செயற்பாடுகளிளும் ஈடுபட்டு வருகின்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் புதிய பரினாம வளர்ச்சிகளுடன் தென்கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமல்லாது தேசிய ரீதியில் தனது செயற்பாட்டினை முன்னெடுத்து ஒரு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக திகழ்கின்றது என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago