2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப்பீடம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 29 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம்.ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ், ஜமால்டீன்

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 05ஆம் திகதி தொழில்நுட்பப்பீடத்துக்கான கற்கைநெறி  ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.

மேற்படி பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இந்த தொழில்நுட்பப்பீடமானது இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் 06ஆவது கற்கைநெறிப்பீடமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இக்கற்கைநெறிக்கு முதற்கட்டமாக 160 மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தொழில்நுட்பப்பீடத்துடன் விவசாய தொழில்நுட்ப கற்கைநெறியும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கற்கைநெறியும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கற்கைநெறிக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் 75 மாணவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X