Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 09 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை, நற்பிட்டிமுனை ஆயுர்வேத வைத்தியசாலையை அதற்குரிய நிரந்தரக் கட்டடத்தில் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய காரியாலயத்துக்கு முன்பாக இன்று (09) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அல்கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீனிடம் ஆர்ப்பாட்டத்தில் மகஜர் கையளித்தனர்.
அங்கு மேற்படி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தெரிவிக்கையில்,'2014ஆம் ஆண்டு தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ், நற்பிட்டிமுனையில் 20 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தில் இயங்கிவந்த இந்த வைத்தியசாலையானது கடந்த 06 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. தற்போது அவ்வைத்தியசாலையானது எங்கு இயங்குகின்றது என்பது கூடப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், மாகாண ஆயுர்வேத வைத்திய ஆணையாளர், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், 113 பொதுமக்களின் கையொப்பங்களுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்கெனவே முறைப்பாடு செய்திருந்தோம். அது தொடர்பில் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்திய ஆணையாளரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியபோது, அவ்வைத்தியசாலைக் கட்டடம் 2016ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ளது. அதற்காக அவ்வைத்தியசாலை வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டதாகத்; தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வைத்தியசாலைக் கட்டடப் புனரமைப்புக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டுப் பட்டியலிலிருந்து அறிய முடிகின்றது, அதேவேளை, அவ்வைத்தியசாலைக்கான புனரமைப்புப் பணி இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை' என்றார்.
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago