2025 மே 03, சனிக்கிழமை

'நிலையான அரசியல் தீர்வுக்காக தமிழ் மக்கள் காத்திருப்பு'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்    

நிலையான அரசியல் தீர்வை எதிர்பார்த்தவர்களாக தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்பதுடன், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும்வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணம் தொடரும் எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பிர் த.கலையரசன் தெரிவித்தார்.

முதியவர்கள் 84 பேருக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்வு, நாவிதன்வெளி -2 சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில்; அங்குள்ள பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது. 'தமிழர்களாகிய நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக கூட்டமைப்பின் தலைவரும் பக்குவமாகச் செயற்பட்டு வருகின்றார்.

அம்பாறையில் மூவின மக்களும் வாழ்ந்துவரும் நிலையில், தமிழ் மக்களின் அபிவிருத்திகள் திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை கவலைக்குரியதாகும். தமிழ்ப் பிரதேசங்களின் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை. அந்த அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக நாம் அனைவரும் முன்னின்று உழைக்க வேண்டும்' என்றார்.

'மேலும், தமிழ் மக்களின் நிலங்கள் திட்டமிட்ட முறையில் சூறையாடப்பட்டுள்ளன. அந்த நிலங்களை   வழங்க நல்லாட்சி அரசாங்கம்  நடவடிக்கை எடுகாமல் உள்ளது. குறிப்பாக, பொத்துவில் மற்றும் சம்மாந்துறைப் பகுதிகளில் நில அபகரிப்புகள்  இடம்பெற்றுள்ளன. திருக்கோவிலிலும் இந்த நிலைமையே. இவை அனைத்தையும்; பெற்றெடுக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X