2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பதுங்கு குழிகள் கண்டு பிடிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்களப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று திருக்கோவில், பொத்துவில் வனப்பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு சூட்சகமான முறையில் குளக்கரை மற்றும் நீர் நிலைகளுக்கு அண்மையில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட  பதுங்கு குழிகள் திருக்கோவில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

திருக்கோவில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் பொத்துவில் கோமாரி, தாண்டியடி, சங்கமன்கந்தை, கஞ்சிகுடியாறு, சாகாமம், பெரியதலாவ மற்றும் உடும்பன்குளம் ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகளை கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத மிருகவேட்டையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக திருக்கோவில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

காடுகளில் உள்ள மிருகங்கள் குளக்கரை மற்றும் நீர் நிலைகளுக்கு நீர் அருந்துவதற்காக வருகின்ற வேலை இவ்வாறு பதுங்கு குழிகள் வெட்டி அதன் மேல் பகுதியில் குப்பைக் கூழங்களை வைத்து அதனுள் பதுங்கியிருந்து மிருகங்களை வேட்டையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .