2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'பனங்காட்டு வைத்தியசாலையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்;'

Suganthini Ratnam   / 2016 மே 11 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, பனங்காட்டு வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை  விஜயம் செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் வைத்தியசாலை தரம் உயர்த்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் தலைமையில் வைத்தியசாலையில்  நடைபெற்ற  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும், இந்த வைத்தியசாலையை  தரம் உயர்த்துவதற்கு தேவையான உரிய அறிக்கைகளை உடன் சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரையும் வழங்கினார்.

இதன்போது, அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என மாகாண அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X