2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'பரீட்சையை பிற்போடவும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

இலங்கை பரீட்சை திணைக்களத்தால் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி தேசிய ரீதியில் நடத்தப்படவுள்ள இலங்கை அதிபர் சேவை தரம் 3க்கான போட்டிப் பரீட்சையை  பிற்போடுமாறு இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமாவைத் தொடருகின்ற ஆசிரிய மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரையும் பட்டமேற் கல்வி டிப்ளோமாவுக்கான இறுதிப் பரீட்சை நடைபெறும் என இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதுவும் தேசிய ரீதியில் நடைபெறுகின்ற ஒரு பரீட்சையாகும். இந்த காலப் பகுதிக்குள் நவம்பர் 21 ஆம் திகதியும் ஒரு பாடத்துக்கான பரீட்சை நடைபெறவிருப்பால் அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்த இலங்கை திறந்த பல்கலைக்கழக பட்டமேற் கல்வி டிப்ளோமா பரீட்சார்த்திகள் தோற்ற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பட்டமேற் கல்வி டிப்ளோமா பரீட்சையை பிற்போட வேண்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X