2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பொத்துவில், கல்முனைக்கு புதிய கல்வி வலயங்கள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயத்தையும் கல்முனைப் பிரதேசத்துக்கு   மேலதிகமாக மற்றுமொரு கல்வி வலயத்தையும் நிறுவுவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.  
கிழக்கு மகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம், மகாண சபையில் புதன்கிழமை (21) மாலை நடைபெற்றபோது, இது தொடர்பான பிரேரணையை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி முன்வைத்தார். இதனை அடுத்து, மேற்படி கல்வி வலயங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.  

குறித்த இரு பிரதேசங்களிலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அப்பிரதேசங்களில் கல்விச் செயற்பாட்டில் அதிக இடர்பாடுகள் காணப்படுவதால், அப்பிரதேசங்களில் அவசரமாக கல்வி வலயங்களை அமைப்பதற்கான  நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் இல்லாமையால், மாணவர்களும் ஆசிரியர்களும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  மேலும், கல்முனைக்கும் மற்றுமொரு கல்வி வலயத்தை அமைப்பது காலத்தின் தேவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X