Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை ஒழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், நேற்றுத் (11) தெரிவித்தார்.
இந்நிலையில், போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பான தகவல்களை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு 0672277222 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாக தெரியப்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
விசேட நடமாடும் பொலிஸ் குழுக்கள் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டால், நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை நடவடிக்கையை ஒழிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் போதைப்பொருள்; பாவனையால் சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
கஞ்சா, ஹெரோய்ன், சாராய விற்பனை என்பன அதிகரித்துக் காணப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
45 minute ago
56 minute ago
58 minute ago