Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 29 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாகின்றபோதிலும், கிழக்கு மாகாணத்திலுள்ள பொதுமக்களின் நிலங்களிலிருந்து இராணுவத்தினர் இதுவரையில் வெளியேறவில்லை. எனவே, இம்மாகாணத்தில் பொதுக்கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவ முகாம்;களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறும் இராணுவத்தினரை கிழக்கு மாகாணத்துக்கு நகர்த்துவதையும் புதிய முகாம்கள் அமைப்பதையும் அரசாங்கம் நிறுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், 'கடந்த யுத்தத்தின்போது அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான தமிழ்ப்; பிரதேச இடங்களிலுள்ள பொதுக்கட்டடங்களிலும் பொதுமக்களின் காணிகளிலும் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர்; முகாம்களை அமைத்திருந்தனர்.
இந்நிலையில், 2007ஆம் ஆண்டு விசேட அதிரடிப்படையினர் வன்னிக்கு நகர்த்தப்பட்டபோது, அம்முகாம்களில் இராணுவத்தினர் நிலைகொண்டனர். மேலும், இராணுவத்தினர் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, திருக்கோவில், கோமாரி, காரைதீவு, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் மேலதிகமான முகாம்களை அமைத்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இவ்வாறு அமைக்கப்பட்ட எந்தவெரு முகாமும் நல்லாட்சி ஏற்பட்டபோதிலும், இதுவரையில் அகற்றப்படாமலுள்ளது. எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள பொதுக்கட்டடங்கள் மற்றும்; பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, அவற்றை பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 minute ago
20 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
20 minute ago
41 minute ago
50 minute ago