Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 19 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா, றியாஸ் ஆதம், எஸ்.ஜமால்டீன், ஏ.ஜி.ஏ.கபூர்
அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் பிராந்திய காரியாலயத்தை இரண்டாகப் பிரித்து, அதனை கல்முனைக்கு கொண்டு செல்வதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கையைக் கண்டித்து அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை(18) அமைதிக் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளி வாசல்களின் சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய, ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயல் வாயலின் முன்பாக பல நூற்றுக் கணக்கான ஆதரவாளர்களின் பங்கு பற்றுதலுடன் ஆரம்பித்த இக்கண்ணடனப் பேரணி, பிரதான வீதியூடாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது.
இதன் போது அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் கடிதத்; தலைப்பிலான மகஜர், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைக்குமாறு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம் லத்தீபிடம் கையளித்து வைக்கப்பட்டது.
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது ஊரின் வளத்தை வெளியே கொண்டு செல்வதை தடுத்து நிறுத்துமாறும் மு.கா. தலைவர் நீதியமைச்சராக இருந்த போது இவ்வாறே எமது பிரதேசத்துக்கான நீதிமன்ற பரப்பெல்லையையும் சுருக்கி சதிசெய்தார்.
மேலும் தபால் தந்தி அமைச்சராகவிருந்த போது, எமது பிரதேசததுக்கான தபால் தந்தி அத்தியட்சகர் காரியாலத்தை வர்த்தமானி அறிவித்தல் செய்வதற்கும் மறுத்து வந்திருந்தார்.
எமது பிரதேசத்தின் இரு தொகுதிகளைகளையும் எல்லை நிர்ணயம் செய்து அதனை மீளாய்வு செய்வதற்கும் தடையாக இருந்து வந்துள்ளார். இவ்வாறு இருக்கின்ற எமது பிரதேசத்தின் சொத்துக்களை மேலும் இல்லாமல் செய்வதற்கும் எமது வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கும் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.
முன்னாள் உறுப்பினர் எஸ்எம். சபீஸ் இது விடயமாக கருத்து தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் பிராந்திய காரியாலயத்தை இரண்டாக உடைத்து கல்முனைக்கு கொண்டு கொண்டு செல்லும் சதி முயற்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது.
இதனைத் தடுப்பதற்கும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் வகையிலும் அமைதியான முறையில் கண்டனப் பேரணியை நடாத்துவதற்கு அக்கரைப்பற்று அனைத்துப் பள்வாசல்கள் சம்மேளனம் தீர்மானித்திருந்தது.
இதற்கமையவே இந்த கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதனை நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாது போனால் அக்கரைப்பற்று மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பாரியளவிலான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago