2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு முக்கியம்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமானதென தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.

கிராமியப் பெண்களின் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெற்ற தொழில் வழிகாட்டி பயிற்சிநெறியின் இறுதிநாள் நிகழ்வு, ஒலுவில் வளாகத்தில் புதன்கிழமை (09) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'குடும்பப் பெண்கள் சுயமாக தொழிலை ஆரம்பிப்பதன் மூலம் அக்குடும்பங்களில் எவ்வித அசௌகரீயமும் ஏற்படாமல்  சுமூகமாக இருக்கும். தனக்கென தொழிலை கற்றுக்கொண்டால், பிறரை நம்பி வாழவேண்டிய அவசியம் இல்லை.

தென்கிழக்கு பல்கலைக்கழகமானது சமூகத்துக்கும்  பல்கலைக்கழகத்துக்குமுள்ள இடைவெளியைக் குறைத்தும் கல்வியை மட்டும் இலக்காக கொண்டு செயற்படாமலும் சமூக விருத்திக்காக செயற்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் எங்களிடத்தில் ஒருங்கிணைந்த கூட்டுச் செயற்பாடு ஏற்பட்டு, அதனூடாக ஒருவருடைய கலாசாரத்தை ஒருவர்  புரிந்துகொள்ளக்கூடிய நிலையேற்படுகின்றது.

மேலும் இப்பல்கலைக்கழகத்தில் சமூகம் சார்ந்த அபிவிருத்தித்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
 
 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X