Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
பொலிஸ் திணைக்களம் கடந்த தேர்தல்களில் பக்கசார்பின்றி சட்டத்தை நிலைநாட்டியது என அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
பொலிஸ் சேவையின் 149 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த பொலிஸ் தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
1866ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 1971ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை சிவில் கலவரங்கள்,விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க பொலிஸ் திணைக்களத்துக்கு ஏற்பட்டது.
யுத்தத்தினால் 2594 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீரமரணம் அடைந்தனர்.1327 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கவீனமடைந்தனர்.
பொலிஸ் திணைக்களம் கடந்த தேர்தல்களில் பக்கசார்பின்றி சட்டத்தை நிலைநாட்டியது.போதைப்பொருள் ஒழிப்பு,வீதி ஒழுங்குகளை முன்னெடுத்தல்,பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் குறித்து பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago