2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

40 மதுபானப் போத்தல்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, சவளக்கடைப் பிரதேசத்திலிருந்து  சேனைக்குடியிருப்புப் பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டியொன்றில் மதுபானப் போத்தல்கள் 40 ஐக் கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் 28, 33 வயதுகளையுடைய இருவரை ஞாயிற்றுக்கிழமை (07) பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், முச்சக்கவண்டியுடன் அம்மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.  

திலாவடிச்சந்தியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், குறித்த முச்சக்கரவண்டியை மறித்துச் சோதனையிட்டபோது, அதில்; மதுபானப் போத்தல்கள் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனை அடுத்து, குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியையும் முச்சக்கரவண்டியில் பயணித்தவரையும் கைதுசெய்து பொலிஸ் பிணையில் விடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X