2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மரணித்தவர்களை அதிகாரத்துக்கு கொண்டுவர ஆசைப்படுவது அறிவுசார்ந்த விடயமல்ல

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

மரணித்தவர்களுக்கு உயிர் கொடுத்து அதிகாரத்துக்கு கொண்டு வர ஆசைப்படுவது அறிவு சார்ந்த விடயமல்ல. அப்படி அக்கரைப்பற்று மக்களால் ஒரு போதும் சிந்திக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று - பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் மூலம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வியாழக்கிழமை(29)  மாலைஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே தவம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மரணித்தவர்களால் இனி பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை. அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு செய்த அநியாயங்களுக்காக மக்கள் அவர்களை ஓய்வெடுக்க வைத்துள்ளனர்.

பதவிகளையும் அதிகாரங்களையும் சரியான முறையில் பயன்படுத்திருந்தால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. அவர்கள் மீண்டும் உயிர்ப்பித்து எழுவார்கள் என்று ஒரு சிலர் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.

பாடசாலைகளுக்கான ஆசிரயர் பற்றாக்குறை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்து வருகின்றோம். கல்விக் கல்லூரிகளிருந்து வெளியோறும் ஆசிரயர்கள் எமது மாகாணத்திலே அமர்த்தப்பட வேண்டுமென நாங்கள் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம். இருந்தபோதும் மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்துக்கு தொடர்ந்தும் அநீதியிழைத்து வருகின்றது.

எனவே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, சகல கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்திற்கே கொண்டுவரப்படுவர். அதில் யாரும் சலனப்பட வேண்டாம். முதலமைச்சர், கல்வி அமைச்சர் தொடக்கம் எல்லா உறுப்பினர்களும் இதில் கவனமாக இருந்து வருகிறோம். சம்மந்தப்பட்ட பயிலுனர் ஆசரியர்கள்  முதலமைச்சரின் நிருவாக உத்தியோகத்தரை கீழ்வரும் இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும். -0771505747, 0262226071 என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X