Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற்சங்கத்தின் 'முகாமை' எனும் செய்தி மடல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(13) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இம்மடலில் முகாமைத்துவ உதவியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், அரச அலுவலகங்களின் செயற்பாடுகள், அரச அலுவலகங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்பனவற்றுடன் அரச சேவை உத்தியோகத்தர்களின் வினைத்திறமை காண் தடை தாண்டல் பரீட்சைகள், பதவி உயர்வுப் பரீட்சைகள் என்பனவற்றுக்கான நிதிப் பிரமாணம்,தாபன நடைமுறை,அலுவலக நடைமுறை,அலுவலக முகாமைத்துவம் என்பனவற்றுடன் பல்வேறு நவரச அம்சங்களும் அடங்கியுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முகாமைத்துவ உதவியாளர் என்.ரமனீஸ்வரன் இம்மடலின் ஆசிரியராவார்.
இது தொடர்பில் ரமனீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
இதனை ஒரு மாத சஞ்சிகையாக வெளியிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளோம். இதனை விரிவுபடுத்தி இன்னும் பல்வேறு அம்சங்களை சேர்க்கவுள்ளோம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் முகாமைத்துவ உதவியாளர் கடன் நிதியம் என சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிதியத்தில் சேர்க்கப்பட்டு சங்கத்தின் உறுப்பினர்களில் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற சங்கஉறுப்பினர்களான கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜூனைதீன்,லகுகல பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி ஜே.யூ.வகாப்தீன்,நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ்.எம்.அப்துல் கையூம், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.சண்முகம், கல்முனை உதவிக் கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தில் கடமையாற்றிய ஏ.சீ.எம்.யூசுப்,இலங்கை நிருவாக சேவைக்கு பதவி உயர்வு பெற்று கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றும் கே.இளங்குமுதன் மற்றும் பதிவாளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உதவிப் பதிவாளராக கடமையாற்றும் ஜே.பைறூஸ் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago