2025 மே 21, புதன்கிழமை

'மு.கா.வின் செயலாளர் பதவியானது நிர்வாகம் சம்பந்தப்பட்ட பதவியாக இருக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எம்.சி.அன்சார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  செயலாளர் பதவியானது அரசியல் சார்ந்த பதவியாக இருக்கக்கூடாது. அது நிர்வாகம் சம்பந்தப்பட்ட பதவியாக இருக்க வேண்டுமென மு.கா. தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்துக்கு கட்சியொன்று வேண்டுமென்ற நிலை மாறி இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சி வேண்டும்;, அமைச்சுப் பதவியைப் பெறுவதற்காக ஒரு கட்சி வேண்டுமென்ற நிலைமை வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

சம்மாந்துறைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற அபிவிருத்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நாம் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் எந்தவோர் அபிவிருத்தியையும் செய்ய முடியாமல் நாம் தவித்தோம். நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தோம். அந்த வாய்ப்பு எமக்கு இப்போது கிட்டியுள்ளது' என்றார்.

'எமது கட்சியைப் பிளவுபடுத்தும் சதித் திட்டங்கள் எமது கட்சியைச் சேர்ந்த சிலராலேயே அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த மரத்தை எந்தச் சதியாலும்; அழிக்க

முடியாது. இந்தக் கட்சி இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பு. அதை எவராலும் உடைக்க முடியாது' என்றார்.
'ஒரு காலத்தில் இந்தச் சமூகத்துக்கு ஒரு கட்சி வேண்டுமென்று கூறினார்கள். இன்று ஆளுக்கொரு கட்சி தேவையென்ற நிலைமை வந்துவிட்டது. அவர்கள் அமைச்சர்களாவதற்கு இந்தக் கட்சிகள் தேவைப்படுகின்றன. இந்த நிலைமை சமூகத்துக்கு ஆபத்தானதாக அமையும். பதவி ஆசை இல்லாத, சமூகப் பற்றுள்ள அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும். பதவி ஆசையால் இப்போது எமது கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X